Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காபூலில் தற்கொலை குண்டுத் தாக்குதல்: ஐ.எஸ் பொறுப்பேற்பு

In உலகம்
Updated: 11:04 GMT, Jul 31, 2017 | Published: 11:04 GMT, Jul 31, 2017 |
0 Comments
1728
This post was written by : Sylviya

ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள ஈராக் தூதரகத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் மூவர் தூதரகத்திற்குள் நுழைய முற்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து, ஆப்கான் வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மோதலில் தூதரகத்தின் பாதுகாவலர்கள் மற்றும் பொதுமக்கள் காயமுற்றிருக்கலாம் எனவும் தூதரக அதிகாரிகள் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் ஆப்கான் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த தாக்குதல் தொடர்பில் ஐ.எஸ் இன் இணையத்தளத்தில் வெளியான தகவல்களின் படி, தூதரகத்தின் முன்பாக இருவர் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியதாவும் மேலும் இருவர் தூதரக வளாகத்தினுள் நுழைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg