Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள்: விஷால் கோரிக்கை

In சினிமா
Published: 11:44 GMT, Jul 31, 2017 |
0 Comments
1343
icon_com
This post was written by : Puvanes
vishal001

ஏழைக் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக அனைவரும் முடிந்தவரை உதவி செய்ய வேண்டும் என நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு குழந்தைகள் காப்பகம் ஒன்றில் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், அப்துல் கலாம் ஒரு குடியரசுத் தலைவர் மட்டுமன்றி சிறந்ததொரு மனிதராக வாழ்ந்ததோடு அனைவருக்கும் முன்னுதாரணமாகவும் இருந்த ஒருவர் எனவும் விஷால் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளின் கல்வி மூலமாக ஒட்டு மொத்த சமுதாயமே வளர்ச்சியடையும் எனக் குறிப்பிட்ட அவர், குழந்தைகளின் கைகளிலேயே இந்தியாவின் எதிர்காலம் உள்ளது என அப்துல் கலாம் கூறியுள்ளார். அதேபோல என்னால் முடிந்த வரை குழந்தைகளுக்கு உதவிகளை நான் செய்து வருகின்றேன். இதனை அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்படுத்த முடியும் எனவும் விஷால் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கஷ்டப்பட்டு பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளரின் படத்தை நிறுத்தும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அப்படி யாராவது செய்வதற்கு முயற்சி செய்வார்கள் எனின் தயாரிப்பாளர் சங்கம் அந்த படப்பிடிப்பை நடத்த உதவிகளைச் செய்யும் எனவும் விஷால் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த நிகழ்வின் போது ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக நடிகர் விஷால் நிதி உதவிகளையும் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg