Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்பாறை மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

In
Published: 13:38 GMT, Jul 31, 2017 |
0 Comments
1390
icon_com
This post was written by : Ravivarman
01 (2)

அம்பாறை மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று (திங்கட்கிழமை) அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மேற்படி கூட்டத்தில் அம்பாறையில் திணைக்கள ரீதியாக மக்கள் பிரதிநிதிகள் ஒதுக்கிய நிதி தொடர்பாகவும், அதன் வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும், ஆராய்ந்து தீர்வுகளை மேற்கொண்டனர்.

குறிப்பாக நகர மயாமாக்கல் திட்டத்தின் கீழ் அம்பாறை நகரை விரிவுபடுத்தல், சுகாதார அமைச்சின் தேசிய போசாக்குத் திட்டம், தேசிய சிறுநீர் நோய் தடுப்பு திட்டம், வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதார சேவைகளை வழங்குதல் மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை பிராந்தியங்கள் ஊடாக மேற்கொள்ளுதல் தொடர்பாகவும் மேற்படி கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் போது, அமைச்சர் தயா கமகே, பிரதியமைச்சர்களான பைஷல் காசீம், அனோமா கமகே, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், நாடாளுமன்ற உறுப்பினா் றொபின், கிழக்கு மாகாணசபை எதிர்க் கட்சித்தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட மேலதிக அரசங்க அதிபர் உள்ளிட்டவர்களுடன் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

02

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg