Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்: விவேகம் வெளியீடு!

In சினிமா
Published: 14:13 GMT, Jul 31, 2017 |
0 Comments
1902
icon_com
This post was written by : Ravivarman
201707311656125871_Major-Positive-news-for-Ajith-Fans_SECVPF

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘விவேகம்’ படம் எதிர்வரும் ஆகஸ்ட் 24ஆம் திகதி வெளியிடப்படவிருக்கின்றது.

இதனை இத்திரைப்படத்தின் இயக்குநர் சிவா தனது டுவிட்டர் தளத்தில் உறுதி செய்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படம், சமீபத்தில் தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் டீசர் இந்திய சினிமாவில் புதிய சாதனையைப் படைத்தது. மேலும் படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg