Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Published: 15:54 GMT, Jul 31, 2017 |
0 Comments
1184
icon_com
This post was written by : Sivaguru Siva
_97131922_040861217-1

ரஷ்யாவில் பணியாற்றும் அமெரிக்க தூதரகப் பணியாளர்களில் 755 பேர் கண்டிப்பாக எதிர்வரும் செப்டெம்பா முதலாம் திகதிக்கு இடையில்  நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென்பதை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

சமகால உலகவரலாற்றில், ஒரு நாட்டிலிருந்து மிகப்பெரிய அளவில் தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் ஆணை பிறப்பிக்கபட்டிருப்பது இதுவே முதல் முறை.

ரஷ்யா மீது புதியதடைகள் விதிக்கப்படவேண்டுமென அமெரிக்க கொங்ரஸ் மற்றும் செனட்சபை ஆகிய இரண்டு அவைகளுமே தீர்மானங்களை நிறைவேற்றிய நிலையில் ரஷ்யாவின் இந்த பதிலடி வழங்கப்பட்டுள்ளது.

_97140759_762bf760-8a0c-4d76-99cb-c364ba0e041d

பால்ரிக் நாடுகளுக்கு ரஸ்யா மிகப்பெரிய அச்சுறுத்தல் என அமெரிக்காவின் உப ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறியுள்ளார்.

ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றும் பணியாளர்களில் 755 பேர் எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதிக்கு இடையில்  நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்று உறுதிப்படுத்திய பின்னர் மைக்பென்ஸின் கருத்து வந்துள்ளது.

எஸ்தோனியா லத்வியா மற்றும் லித்வேனியான ஆகிய பால்ரிக் நாடுகளின் ஜனாதிபதிகளை சந்தித்தபோதே ரஸ்ய அச்சுறுத்தல் குறித்து மைக் பென்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

_97092507_7db4b43c-4a98-415a-8fd4-6af07eeb00de

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்சிற் நடைமுறை பூரணப்படுத்தப்பட்டதும் ஒன்றியநாடுகளுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள எல்லைக் கட்டுப்பாடற்ற பயணங்கள் முடிவுக்கு வரவுள்ளன.

இதனை பிரித்தானியப் பிரதமரின் நம்பர்-10 பணியகம் அறிவித்துள்ளது. எல்லைக் கட்டுப்பாடு தொடர்பாக பிரித்தானிய அமைச்சரவையிலுள்ள  அமைச்சர்கள் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்துவரும் நிலையில் பிரதமர் திரேசா மேயின் இந்த நிலைப்பாடு வந்துள்ளது.

பிரெக்சிற் நடைமுறை பூரணப்படுத்தப்படும் 2019 மார்ச் மாதத்தில் எல்லைக் கட்டுப்பாடற்ற பயணங்கள் முடிவுக்கு வருமெனவும் பிரதமரின் பணியகம் குறிப்பிடுகிறது

170731111424-charles-kuonen-suspension-bridge-exlarge-169

உலகின் மிக நீளமான தொங்குபாலம் சுவிற்சலாந்தில் திறந்து வைக்கபட்டுள்ளது. 494 மீற்றர் நீளம்கொண்ட இந்த தொங்கு பாலம் மலைப்பள்ளத்தாக்கின் தரையிலிருந்து 85 மீற்றர் உயரம் கொண்டது.

முன்னர் இருந்த தொங்குபாலம் அகற்றபட்டு இந்தபுதிய பாலம் அமைக்கபட்டுள்ளது

ஆனால் இந்தப் பாலத்தை அடைவதற்கு குறைந்தது சிலமணிநேரமாவது செல்லும் அப்பிடிச்சென்றுவிட்டால் இந்தப் பாலத்தால்  நடந்து சென்று அல்பஸ் மலையின் அழகை ரசிக்க முடியும்.

அந்தரத்தில் தொங்கும் உலகின் மிக நீளமான இந்த தொங்குபாலத்தால் நடந்து செல்வதற்கு எல்லாருக்கும் துணிவுவராது. இடைவழியில் அப்படி ஒர பயம் வந்தால் வேறு வழியில்லை கண்களை மூடிக்கொண்டு முன்னால் செல்பவரின் கரங்களை பற்றியபடி இறுதித்தூரத்தையும் கடக்கவேண்டியது தான்.

japan-technology-news-cray-supercomputer

உலகின் மிக வேகமான உச்சக்கணினி (சுப்பர் கொம்பியூட்டர்) ஒன்றை ஜப்பான் உருவாக்கிவருகிறது. இதன் மூலமாக ஆட்டிபிசல் இன்ரலியன்ஸ் எனப்படும் செயற்கை அறிவுத்திறனை விருத்திசெய்யும் ஆய்வுகளில் ஜப்பான் முன்னோக்கிப் பாய்கின்றது.

இந்த புதிய சுப்பர் கொம்பியூட்டரானது 130 பீத்தா புளொப்ஸ் வேகத்தில் இயங்கக்கூடியது. அதாவது ஒரு வினாடியில் 130 குவாட்றில்லியோன் கணிப்பீடுகளை மேற்கொள்ளக்கூடியது. ( அம்மாடியோவ்!)

130 குவாட்றில்லியோன் கணிப்புகள் என்பது ஒரு செக்கனில் 130 மில்லியன் பில்லியன் கணிப்புகளைக்கொண்டது

அடுத்தவருடம் ஏப்ரலில் இந்தக்கணினி பூணப்படுத்தப்படும் அதன் பின்னர் இதுதான் உலகின் மிக வேகமான உச்சக்கணினி என்ற பெருமையைப்பெறவுள்ளது.

சரி இலக்கத்தி;ல் வழங்கப்படும் குவாட்றில்லியோன் தொகையை  எண்ணிச்சொல்கிறீர்களா?  1,000,000,000,000,000,000,000,000.  என்ன எண்ணி முடித்துவிட்டீர்களா?

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg