Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம்!

In இலங்கை
Updated: 17:18 GMT, Jul 31, 2017 | Published: 16:44 GMT, Jul 31, 2017 |
0 Comments
1742
This post was written by : Ravivarman
vijaya1

நீதி மற்றும் பௌத்த மத விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை அவ்வமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள அமைச்சர் ஒருவர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் தீர்மானம் எடுக்க வேண்டி வரும் என அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த அமைச்சின் கீழ் உள்ள சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு முன்வைக்கப்பட்ட இலஞ்ச, ஊழல் ஆவணங்கள் தொடர்பில் நீண்ட காலமாக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதும், இந்த வேண்டுகோளை முன்வைப்பதற்கு பிரதான காரணம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மூலம் தகவல்கள் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg