Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய நினைவுதின விழாவில் கலந்துகொண்டார் இளவரசர் சார்ள்ஸ்

In
Updated: 14:48 GMT, Aug 1, 2017 | Published: 07:05 GMT, Aug 1, 2017 |
0 Comments
1764
icon_com
This post was written by : Sylviya

வேல்ஸில் நடத்தப்பட்ட தேசிய நினைவுதின விழாவில் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் கலந்துகொண்டுள்ளார்.

குறித்த நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்வின் போது, முதலாம் உலகப்போர் காலத்தில் நடைபெற்ற பெஷன்டேல் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இளவரசர் சார்ள்ஸ் மலர் வளையம் ஒன்றையும் அர்ப்பணித்துள்ளார்.

பெஷன்டேல் போர் நடத்தப்பட்டு நேற்றுடன் 100 ஆண்டுகள் பூர்த்தியானதை நினைவுகூரும் வகையிலேயே குறித்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வு நிறைவடைந்தமையின் பின்னர் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் வேல்ஸ் முதலமைச்சர் கார்வைன் ஜோன்ஸ் ஆகியோர் உயிரிழந்த பீரங்கிப் படையினரின் கல்லறைக்கு விஜயம் மேற்கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பெல்ஜியத்தின் யீப்ரா நகரில் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட குறித்த போரின் போது, அரை மில்லியனுக்கும் மேற்பட்ட கூட்டுப்படை மற்றும் ஜேர்மனிய வீரர்கள் உயிரிழந்ததோடு பலர் படுகாயமுற்றதுடன், மேலும் பலர் காணாமலும் போனமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg