Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலையக சமூகத்தை இழிவுபடுத்தும் காணொளி – அரசியல்வாதிகளை குறைகூற முடியாது : திகாம்பரம்

In
Published: 10:21 GMT, Aug 1, 2017 |
0 Comments
2282
icon_com
This post was written by : Sujitharan

மலையக சமூகத்தையும், மலையக பெண்களையும் கொச்சைப்படுத்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவும் காணொளி தொடர்பில்  அரசியல்வாதிகளை குறைக்கூற முடியாது என, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, மலையக மக்களை இழிவாக பேசி ஜேர்மனியர் ஒருவர் வெளியிட்ட காணொளியின் பின்புலத்தில், வடக்கு அரசியல்வாதி ஒருவர் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுவது குறித்து ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். ஊடகவியலாளரின் கேள்விக்கு அமைச்சர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்,

‘ஒருவர் இருவர் கூறுவதால் தமிழ் மக்களிடையே பிரச்சினைகளை ஏற்படுத்த முடியாது. இதில் அரசியல்வாதிக்கு தொடர்பு இருக்கிறதா? என்று தெரியாது. இணையத்தைப் பயன்டுத்தி சமூகவலைத்தளங்கள் ஊடாக பலர் பல பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக அரசியல்வாதிகளைக் குறைக்கூற முடியாது’ என்றும் கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg