Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை குறித்து ஸ்ரீ.சு.கட்சியின் நிலைப்பாடு விரைவில்!

In இலங்கை
Updated: 08:30 GMT, Aug 2, 2017 | Published: 08:30 GMT, Aug 2, 2017 |
0 Comments
1248
This post was written by : Ravivarman

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை எதிர்வரும் 08ம் திகதி வெளியிட அக்கட்சி தீர்மானித்துள்ளது.

கடந்த வாரம் அரசியலமைப்பு செயற்பாட்டுக்கு குழு கூட்டத்தில் சுதந்திரக் கட்சி சார்பாக கலந்து கொண்ட குழுவின் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவா் மேலும் தொிவிக்கையில்,

”புதிய அரசியலமைப்பு விடயங்கள் தொடா்பிலும் குறிப்பாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடா்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இறுதித் தீா்மானத்தினை எடுத்துள்ளது. இது குறித்து கட்சியின் தலைவா் மற்றும் அனைத்துத் தரப்பினருடனும் விாிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது என அவா் மேலும் தொிவித்தாா்.

இந்நிலையில் அரசியலமைப்பு செயற்பாட்டு குழுவின் அடுத்த அமர்வு எதிர்வரும் 08ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg