Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மட்டு. வேலையற்ற பட்டதாரிகள் மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு!

In இலங்கை
Published: 12:14 GMT, Aug 2, 2017 |
0 Comments
1167
icon_com
This post was written by : Vithushagan
625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் உட்பட நால்வர் மீது பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலை உரிமை கோரி காந்திபூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, பொதுமக்களின் அமைதிக்கும், சமாதானத்திற்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அரச கரும நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொள்ள முற்பட்டதாக தெரிவித்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த மார்ச் மாதம் 07ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த், அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் தன்னான ஞானரத்ன தேரர் உட்பட நான்கு பேரும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg