Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கட்டார் நெருக்கடியை தீர்ப்பதில் அமெரிக்காவின் பங்கு அளப்பரியது!

In உலகம்
Published: 05:56 GMT, Aug 3, 2017 |
0 Comments
1353
icon_com
This post was written by : Risha

கட்டாருக்கும், சவுதி உள்ளிட்ட நான்கு வளைகுடா நாடுகளுக்கும் இடையிலான நெருக்கடியை தீர்ப்பதில் அமெரிக்காவின் பங்கு அளப்பரியதாகும் என கட்டார் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சருடன் கூட்டாக நேற்று (புதன்கிழமை) கட்டாரில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலி அமைச்சருடனான நேற்றை சந்திப்பின்போது, ஏழு கடற்படை கப்பல்களை கொள்வனது செய்வது தொடர்பான 5 பில்லியன் யூரோ பெறுமதியான ஒப்பந்தமொன்று இத்தாலியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு உடன்படிக்கையின் ஒரு அங்கமாகவே இவ் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சந்திப்பின்போது இரு தரப்பிற்கும் இடையே கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் பகிர்ந்துக்கொண்ட கட்டார் அமைச்சர், ”இத்தாலிக்கும், கட்டாருக்கும் இடையே பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்த நட்புறவு பேணப்பட்டு வருகிறது. இந்நிலையில், இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

மேலும், பயங்கரவாதத்திற்கு துணை போவதாக கட்டார் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு கட்டார் முகங்கொடுத்து வருகிறது. இந்த நெருக்கடியை தீர்ப்பதில் அமெரிக்காவின் பங்கு அளப்பரியது” என்றும் குறிப்பிட்டார்.

கட்டாருக்கும், சவுதி அரேபியா, பஹ்ரேன், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் எகிப்து ஆகிய அரபு நாடுகளுக்கும் இடையிலான சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஒரு அங்கமாகவே இத்தாலி அமைச்சரின் கட்டார் விஜயம் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg