Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாய்லாந்தில் 23 பேரின் உயிரை காவுகொண்டது கடும் மழை

In
Updated: 06:13 GMT, Aug 3, 2017 | Published: 06:13 GMT, Aug 3, 2017 |
0 Comments
1417
This post was written by : Risha

கடும் மழையை அடுத்து தாய்லாந்தை தாக்கிய வெள்ளப்பெருக்கில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் அறிவித்துள்ளது.

தாய்லாந்தின் பத்து மாகாணங்கள் வெள்ளப்பெருக்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த திணைக்களம் நேற்று (புதன்கிழமை) குறிப்பிட்டுள்ளது.

பத்து மாகாணங்களிலும் சுமார் 4 ஆயிரத்து 600இற்கும் அதிகமான கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ள நிலையில், 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுப் பொருட்கள், குடிநீர் மற்றும் மருந்து பொருட்கள் என்பவற்றை வழங்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் தாய்லாந்தில் வான் மற்றும் தரை மார்க்கமான போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg