Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஸ்கொட்லாந்தில் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் பதிவு

In
Published: 07:10 GMT, Aug 5, 2017 |
0 Comments
1232
icon_com
This post was written by : Sylviya
08

ஸ்கொட்லாந்தில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய புவியியல் ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) 3.8 ரிக்டர் அளவில் பதியப்பட்ட நிலநடுக்கம்,  மாலை 3.45 மணியளவில் ஏற்பட்டதாகவும்  அது  மொய்டார்ட் பகுதியில் மையம் கொண்டிருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே போல் கின்கியூசீ எனும் பகுதியில் 1.5 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் குறித்த புவியியல் ஆய்வு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்தில் கடந்த 1986 ஆம் அண்டிற்கு பிறகே இதுபோன்ற நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிலநடுக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த புவியியல் ஆய்வு மையம், “ஸ்கொட்லாந்தின் மேற்குப் பகுதியிலேயே இந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. 1931 ஆம் ஆண்டில் சுமார் 6.1 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கம் பிரித்தானியாவில் உணரப்பட்டது. அதற்கு முன்னதாக அதாவது 1880 ஆண்டில் 5.1 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கம் ஸ்கொட்லாந்திலும் உணரப்பட்டது” என தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg