Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரஞ்ச் றோல் கேக் இலகுவாக செய்யும் வழிமுறை

In
Published: 11:40 GMT, Aug 6, 2017 |
0 Comments
1089
This post was written by : Kemasiya
7tVRVXY

தேவையானவை

மைதா – 75 கிராம்
பொடித்த சர்க்கரை – 100 கிராம்
பெரிய சைஸ் முட்டை – 3
எண்ணெய் – 50 மி.லி.
ஆரஞ்சு எசென்ஸ் – 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1ஃ2 டீஸ்பூன்
ஜாம் – 4 டீஸ்பூன்
பட்டர் பேப்பர் – 1ஃ4 ஷீட்.

செய்முறை

முட்டையின் மஞ்சள் கரு வெள்ளை கருவை தனியாக பிரிக்கவும். வெள்ளை கருவை எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும். இத்துடன் சர்க்கரையை கலக்கவும். பிறகு மஞ்சள் கருவை ஒவ்வொன்றாக சேர்த்து கலந்து எண்ணெய் எசென்ஸ் ஊற்றி நன்கு அடிக்கவும். பின் ஹான்ட் பீட்டர் கொண்டு மைதா பேக்கிங் பவுடர் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து பட்டர் பேப்பர் போட்ட பேக்கிங் தட்டில் ஊற்றி ஸ்பூனால் சமப்படுத்தி 200 டிகிரி செல்சியஸில் 5 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யப்பட அவனில் 15-20 நிமிடங்கள் 150 டிகிரி செல்சியஸில் பேக் செய்யவும். ஆறியதும் ஜாம் தடவி மெதுவாக ரோல் செய்து ஃப்ரிட்ஜில் 1ஃ2 மணி நேரம் வைத்து பின் வட்ட வட்டமாக வெட்டி பரிமாறவும்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.