Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சுயதொழிலை கௌரவிக்கும் விருது

In சினிமா நிகழ்ச்சிகள்
Published: 10:52 GMT, Aug 7, 2017 |
0 Comments
1095
icon_com
This post was written by : Kemasiya
IMG_7687

வீட்டில் இருந்தே சாதனை புரியும் பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது தான் நச்சுரல்ஸ் வழங்கும் ‘சுயசக்தி விருதுகள்’. இந்த விருது வழங்கும் விழா சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் உள்ள முத்தா வெங்கட் சுப்பாராவ் மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த விருதுக்காக விண்ணப்பித்திருந்த  பல ஆயிரம் பெண்களில் இருந்து 150 பெண்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அதிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், நடன நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகிய நிகழ்வில்  இசைக்கலைஞர் அனில் ஸ்ரீநிவாசன், பாடலாசிரியர் மதன் கார்க்கி, பாடகி சைந்தவி ஆகியோர் இணைந்து புதுமைப்பெண் என்ற இசை நிகழ்ச்சியை வழங்கியுள்ளனர்.

மேலும் பூங்கொடி, ரம்யா, ஜெனிஃபர் ஆகியோருக்கு ஆரி மற்றும் அருணா சுப்ரமணியம் ஆகியோர் விவசாயத் துறைக்கான விருதுகளை வழங்கினர். இன்ஸ்பிரேஷன் விருது சந்திரா சுப்ரமணியத்துக்கு வழங்கப்பட்டது.

வித்யா பாலாஜி, நித்யா சேகர், ஐஸ்வர்யா ஆகிய மூவருக்கும் ஹெல்த்கேர் பிரிவில் இயக்குனர் அறிவழகன் விருதுகளை வழங்கினார்.

ஸ்போர்ட் ரூ ஃபிட்னஸ் விருதுகளை வனிதா, பிரவீணா விஜய், சுதா ஆகியோருக்கு சுகாசினி மணிரத்னம் மற்றும் ரோஹினி மணியன் வழங்கினர். இன்ஸ்பிரேஷன் விருது காயத்ரி ராஜனுக்கு வழங்கப்பட்டது.

ரேச்சல், திரிபுர சுந்தரி, ஸ்வாதி ஆகியோருக்கு சுய உதவி பிரிவில் மாஃபா ஹேமலதா மற்றும் ரூ சௌந்தர்யா ராஜேஷ் ஆகியோர் விருதுகளை வழங்கினர்.

பல பெண்கள் நிறைய வேலைகளை செய்கிறார்கள், ஆனலும் அவர்களுக்கு அதற்கான அங்கீகாரம் சரியாக கிடைப்பதில்லை, இந்த விருது சரியான அங்கீகாரம் என்றார் மாஃபா ஹேமலதா.

ப்ரீத்தி விஜய், சப்னா கோஷி, லக்‌ஷ்மி ஆகியோருக்கு கலை மற்றும் கலாச்சார பிரிவில் விருதுகளை வழங்கினார் அருணா சாய்ராம். லக்‌ஷ்மி, சரஸ்வதி ஆகியோருக்கு இன்ஸ்பிரேஷன் விருது வழங்கப்பட்டது.

விஜய பாரதி, தீபிகா, வாமனி, இந்திரா ஆகியோருக்கு கல்வி மற்றும் இலக்கிய பிரிவில் விருதுகளை வழங்கினார் நடிகர் அருண் விஜய்.

ஒவ்வொரு கணவனும், குடும்பமும் பெண்களுக்கு பின்னால் இருக்க வேண்டும்,ஆதரவு கொடுக்க வேண்டும் என்றார் அருண் விஜய்.சௌந்தரி,சௌம்யா ஆகியோருக்கு மீடியா மற்றும் எண்டர்டெயின்மெண்ட் பிரிவில் தன்வி ஷா மற்றும் ஹேமா ருக்மணி ஆகியோர் விருதுகளை வழங்கினர்.

ஷீலா பாபு,ஆறுமுக கன, கதீஜா பீவி ஆகியோருக்கு உணவுத்துறையில் விருதுகளை வழங்கினர் லீனா மற்றும் ஷிவ்ராஜ் ராமநாதன். இன்ஸ்பிரேஷன் விருது பட்ரீஷியாவுக்கு வழங்கப்பட்டது.

விழாவில் ரிங்கு பால் எழுதிய மில்லியனர் ஹவுஸ்வைவ்ஸ் என்ற புத்தகத்தை சுரேந்திரன் மற்றும் மரியா ஜான்சன் ஆகியோர் வெளியிட்டனர்.

ரச்சன, கவித, காவியா ஆகியோருக்கு பியூட்டி, வெல்னஸ் பிரிவில் மீனா குமாரவேல் மற்றும் இனியா ஆகியோர் விருதுகளை வழங்கினர்.

குறித்த விழாவினை பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

 

IMG_7649 IMG_7678 IMG_7687 IMG_7698 IMG_7799 2X8A4907

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg