Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

குஜராத் தேர்தல்: மூன்று இடங்களையும் வெல்லுமா பா.ஜ.க?

In இந்தியா
Published: 05:11 GMT, Aug 8, 2017 |
0 Comments
1097
This post was written by : Varshini

குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மூன்று வேட்பாளர்களை தெரிவுசெய்யும் தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வருகின்றது.

பா.ஜ.க. சார்பில் அதன் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி, காங்கிரஸில் இருந்து அண்மையில் விலகி பா.ஜ.க.வில் இணைந்துகொண்ட பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேலும் போட்டியிடுகின்றனர்.

சட்டசபை வளாகத்தில் இன்று மாலை 4 மணி வரை சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, மாநில தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குஜராத்தில் அண்மைய காலமாக நிலவிவந்த பரபரப்பான அரசியல் சூழலில், இன்று நடைபெறும் தேர்தலின் முடிவுகள் தேசிய அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மூவருக்கும் உறுப்பினர்களது ஆதரவு பலமாக உள்ளதால் மூவரும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதென கருத்துக்கணிப்புகள் வெளியாகின்றன.

அத்தோடு, அமித் ஷா மற்றும் ஸ்மிதி இராணி ஆகியோர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு அதிகமான காணப்படுவதாகவும் காங்கிரஸ் உறுப்பினருக்கும் வெற்றி வாய்ப்பு காணப்படுவதாகவும் பிறிதொரு கருத்துக்கணிப்பு கூறுகிறது.

எவ்வாறெனினும், அண்மையில் குஜராத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது, காங்கிரஸ் உறுப்பினர்கள் களத்தில் இறங்கி உதவவில்லை என்றும், காங்கிரஸ் உறுப்பினர்களை அதன் மேலிடம் விடுதியொன்றில் முடக்கி வைத்திருந்ததாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில் காங்கிரஸிற்கான ஆதரவு சற்று சரிவையே ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்த சங்கர்சிங் வகேலா ராஜினாமா செய்ததை தொடர்ந்து, காங்கிரஸை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் ராஜினாமா செய்தனர். இதனால் காங்கிரஸின் பலம் குறைவடைந்துள்ளது.

மறுபுறத்தில், மக்களை தம் பக்கம் திசைதிருப்புவதற்காக குஜராத்தில் பா.ஜ.க. குழப்பத்தை ஏற்படுத்தி வந்ததாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இவ்வாறு, இரு கட்சிகளுக்கும் இடையில் அரசியல் மோதல் வலுப்பெற்றுள்ள நிலையில், இன்றைய தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)