Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நகர திட்டமிடல் அமைச்சினால் கல்குடாவில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுப்பு!

In இலங்கை
Updated: 10:22 GMT, Aug 8, 2017 | Published: 10:22 GMT, Aug 8, 2017 |
0 Comments
1219
This post was written by : Ravivarman

நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13.08.2017) கல்குடா பிரதேசத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படும் கல்குடாத் தொகுதிக்கான களவிஜயத்தின்போது ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வாழைச்சேனை ஹைறாத் வீதி கொங்கிறீற் இடலுக்காக 50 மில்லியன் ரூபாவும், வாழைச்சேனை உள்வீதிகள் கொங்கிறீற் இடலுக்காக 16 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,மாஞ்சோலை வெள்ளத்தடுப்பு அணை நிர்மாணத்திற்காக 10 மில்லியன் ரூபாவும், காவத்தமுனை சிறுவர் பூங்காவுக்காக 5 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 81 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் அமுலாக்கப்படுவதற்கான திட்ட முன்மொழிவுகள் வரையப்பட்டுள்ளன” என யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வுகளில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உட்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 1

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg