Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘நம்ம விவசாயம்’ பாடல் – காட்சி தொகுப்பு வெளியீடு

In சினிமா
Updated: 12:54 GMT, Aug 8, 2017 | Published: 12:54 GMT, Aug 8, 2017 |
0 Comments
1288
This post was written by : Varshini

நம்ம மூவீஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கே. தயாரிப்பு மற்றும் அன்பரசன் இயக்கத்தில் ‘நம்ம விவசாயம்’ என்ற பாடல் மற்றும் காட்சி தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சி.சத்யா இசையமைத்திருக்கும் இந்த பாடல் மற்றும் காட்சி தொகுப்பு வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் அரங்கில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

தமிழ்நாட்டில் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நிலையில்,  ‘நம்ம விவசாயம்’ சார்பில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுமென, இவ் விழாவில் உரையாற்றிய அம்மா கிரியேஷனைச் சேர்ந்த சங்கர் தெரிவித்துள்ளார்.

இவ்விழாவில் பாடலாசிரியர் கிருதயா உரையாற்றியபோது, விவசாயம் அரசியலாக்கப்பட்டு விட்டது எனவும்,  ஃபிடல் காஸ்ட்ரோ செய்த பசுமை புரட்சி இந்தியாவில் கூடிய விரைவில் நிகழும் என்றும் குறிப்பிட்டார். அத்தோடு, இக் குறும்படத்திற்கு  இசையமைக்க இசைஞானி இளையராஜாவை அணுகியதாகவும், தொடர் அலுவல்களால் அவரால் இசையமைக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்ட கிருதயா, அதன் பின்னர் இளையராஜாவால் பாராட்டப்பட்ட சி.சத்யாவை இசையமைக்க ஒப்பந்தம் செய்ததாக குறிப்பிட்டார். அவரது இசை, இக குறும்படத்திற்கு ஜீவன் என்றும் குறிப்பிட்டார்.

அத்தோடு, இப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களை இசையமைப்பாளர் சத்யா, நடிகர் ஜீவா, இயக்குநர் அன்பரசன், தயாரிப்பாளர் சிவா ஆகியோர் பகிர்ந்துகொண்டதோடு, தமிழ்நாட்டில் தற்போது விவசாயம் எதிர்கொண்டுள்ள சவால் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்தும் உரையாற்றியனர்.

இவ் விழாவில் ஒளிப்பதிவாளர் மோகன், பாபு, இயக்குநர் சதீஷ், தொகுப்பாளர் கேசவன், பாடகர் செந்தில் தாஸ், நடிகர்கள் பவுளி ஜெய்சன், பூங்கொடி, ராஜ், அர்ச்சனா, கோதண்டம், பேபி கோபிகா, பேபி ஷீபா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg