Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பழிவாங்குவதற்காக இரயிலில் வைக்கப்பட்ட வெடிகுண்டு

In இந்தியா
Published: 05:22 GMT, Aug 10, 2017 |
0 Comments
1166
icon_com
This post was written by : Puvanes
train_bomb001

உத்தரப்பிரதேசம் – அமேதியில் அகல் தஹாத் விரைவு இரயிலில் இருந்து வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த இரயிலில் வெடிகுண்டு உள்ளதாக பயணிகள் வழங்கிய தகவலையடுத்து வெடிகுண்டு நிபுணர்களினால் குண்டு கைப்பற்றப்பட்டு பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், வெடிகுண்டுடன் இணைத்து வைக்கப்பட்ட கடிதம் ஒன்றும் இதன் போது மீட்கப்பட்டுள்ளது, அந்த கடிதத்தில் காஷ்மீர் பகுதியில் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி அபு துஜானாவின் கொலைக்கு பழிவாங்குவதற்காகவே குண்டு வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது பொலிஸார்  தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg