Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கின்றார் இந்திய துணை ஜனாதிபதி

In இந்தியா
Published: 12:23 GMT, Aug 10, 2017 |
0 Comments
1145
This post was written by : Puvanes
hamid_ansari001

நாட்டில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் நாட்டின் கொள்கைகளை முறித்து விட்டன. அத்தோடு தாங்கள் பாதுகாப்பாக இல்லை என முஸ்லிம்கள் கருதுவது உண்மையே என இந்தியாவின் துணை ஜனாதிபதியான ஹமீத் அன்சாரி தெரிவித்துள்ளார்.

அன்சாரியின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு பெறுவதனை முன்னிட்டு அவர் வழங்கியுள்ள பேட்டி ஒன்றின் ஊடாகவே இதனைக் கூறியுள்ளார்.

மேலும், சகிப்புதன்மை இன்மை மற்றும் பாதுகாப்பு எனும் பெயரில் நாட்டில் நடக்கும் வன்முறைகளின் காரணமாக தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்ற உணர்வு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிராக வெளியிடப்பட்டுவரும் கருத்துகளின் அடிப்படையில் பார்க்கும் போது அவர்களுக்கு பாதுகாப்பு குறைந்து கொண்டே வருவதாக நான் எண்ணுகிறேன் எனக் கூறிய அன்சாரி காஷ்மீர் பிரச்சினையை அரசியல் ரீதியாகவே தீர்க்க முடியும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)