Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயக் கொடியேற்றம்

In ஆன்மீகம்
Updated: 13:24 GMT, Aug 10, 2017 | Published: 13:24 GMT, Aug 10, 2017 |
1 Comment
1309
This post was written by : Vithushagan

இலங்கையில் மூர்த்தி தலம் தீர்த்தம் மூன்றும் ஒருங்கமைத்து சிறந்து விளங்கும் தலங்களில் ஒன்றாகவும் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகவும் மிகவும் பழைமை வாய்ந்ததாகவும் காணப்படும் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்வாமி ஆலயத்தின் ஆவணி மாத மகோற்சவம் இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

28தினங்கள் மஹோற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறும் இன்று நண்பகல் 12.00 மணிக்கு ஆலயத்தில் கொடியேற்றம் மிகவும் பக்தி பூர்வமாக  நடைபெற்றது.

எந்தவித பேதமும் பாராது இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழ், சிங்கள மக்கள் கூட்டாகக் கலந்து கொள்வார்கள். விஷேட பூஜைகள் உட்பட பக்தர்கள் ஆலயத்திற்கு வழங்கும் பால் செவ்விளநீர் உட்பட பல பூஜைப் பொருட்களைக் கொண்டு பாலாபிஷேகமும் நடைபெறும். பால் அபிஷேகம் நடைபெறும் போது அங்கு நிற்கும் பக்தர்களின் கால்கள் பாலில் நனைவது பக்திப் பரவசத்தை பறைசாற்றுகின்றது.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து விஷேட பூஜைகள் உட்பட திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். விஷேட திருவிழாக்களாக 23 ஆம் நாளான எதிர்வரும் முதலாம் திகதி தீ மிதிப்பாகிய பூமிதிப்பு விழா மாலை 7.00 மணிக்கு நடைபெறும்.

25 ஆம் நாளாள 03 ஆம் திகதி நடேஷர் உற்சவமும் 26ஆம் நாளான 04 ஆம் திகதி வேட்டைத்திருவிழாவும் 27ஆம் நாளான 05திகதி இரதோற்சவமும் (தேர்த்திருவிழா)  நடைபெறும்.

மறுநாள் 28 ஆம் நாளான 06 ஆம் தீர்த்த உற்சவமும் நடை பெறும்.அன்று இரவு இன்னிசைக் கச்சேரிகளுடன் சுவாமி சிலாபம் வீதியுலாவும் வந்து 08 ஆம் திகதி வியாழக்கிழமை பூங்காவனம் சண்டேஸ்வரர் பூஜை வைரவர் மடை போன்ற நிகழ்வுடன் உற்சவம் இனிது நிறைவு பெறும்.

IMG_2192 IMG_2199 IMG_2205 IMG_2219

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg
  1. க.மகாதேவன்