Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நுவரெலியா கந்தப்பளையில் கைக்குண்டு மீட்பு!

In இலங்கை
Published: 16:28 GMT, Aug 10, 2017 |
0 Comments
1237
icon_com
This post was written by : Vithushagan
bomb

நுவரெலியா கந்தபளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தபளை நகர பிரதான குப்பை மேடு அமைந்திருக்கும் கந்தபளை இராகலை பிரதான வீதிக்கு அருகில் இன்று(வியாழக்கிழமை) மாலை கைகுண்டு ஒன்று கந்தபளை பொலிஸாரால்  மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் சென்ற பாதசாரி ஒருவர் கந்தப்பளை பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் கைக்குண்டை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து நுவரெலியா பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் தெரிவித்த கந்தபளை பொலிஸார் இக்கைக்குண்டை மீட்பதற்கு இராணுவத்தின் குண்டு செயழிலக்கும் பிரிவின் உதவியை நாடியுள்ளனர்.

அதேவேளை மாலை 7.45 மணியளவில் கந்தபளை பகுதிக்கு விரைந்த குண்டு செயழிலக்கும் பிரிவு, குண்டை மீட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இராணுவ பிரிவினரும் கந்தபளை பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg