Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தேசிய மட்ட தெரிவு அணிக்கு சீருடை அன்பளிப்பு!

In
Updated: 06:50 GMT, Aug 11, 2017 | Published: 05:01 GMT, Aug 11, 2017 |
0 Comments
1121
icon_com
This post was written by : Ravivarman
2017-08-10-17-36-58

வவுனியா தரணிக்குளம் தரணதீபம் விளையாட்டுக் கழகத்தின் கரப்பந்தாட்ட அணிக்கு நங்கூரம் விளையாட்டுக் கழகத்தினால், சீருடைகள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

குறித்த அணி தற்போது நடைபெறும் DSI தேசிய மட்ட போட்டிக்காக மாவட்ட மட்ட போட்டியில் வெற்றியீட்டித் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே மேற்படி சீருடைகள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

சீருடை அறிமுக விழா பாடசாலை மைதானத்தில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) மாலை 04.00 மணிக்கு கழகத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதா க.சந்திரகுலசிங்கம் (மோகன்) கலந்து கொண்டிருந்தார்.

சிறப்பு அதிதிகளாக வவுனியா பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் விந்துஜன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் சு.காண்டீபன், புளொட் இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர்  வ.பிரதீபன், நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் அமைப்பாளர் சதீஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

2017-08-10-17-34-12 2017-08-10-17-32-50 2017-08-10-17-32-19

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg