Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

என்.எஸ்.ஜனாவின் ‘ஏன் இஞ்ச வந்தனி’ குறும்படம்

In
Published: 06:32 GMT, Aug 11, 2017 |
0 Comments
1175
icon_com
This post was written by : Varothayan

சங்கர் நாராயணபிள்ளையின் கதைக்கு திரைக்கதை எழுதி என்.எஸ்.ஜனா இயக்கியிருக்கும் குறும்படம் ‘ஏன் இஞ்ச வந்தனி?’. பல விருதுகளை வென்றிருக்கும் இக்குறும்படம் அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இக்குறும்படம் குறித்து விமர்சகர் ரஜீவன் ராமலிங்கம் தனது முகப்புத்தகத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்.

“கொஞ்சக் காலத்துக்கு முன்னர், 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த மக்களைப் பார்த்து, அமெரிக்காவின் ட்ரம்ப் கேட்ட கேள்வி ‘ஏன் இஞ்ச வந்தனி’

கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்களைப் பார்த்து பிரித்தானியா கேட்கும் கேள்வியும் அதுதான்..!

இந்தக் கேள்விக்கு முடிவே இல்லை. பாலஸ்தீனியர்களைப் பார்த்து இஸ்ரேலியர்களும், திபெத்தியர்களைப் பார்த்து சீனர்களும்….. என்று ஓயமால் இந்தக் கேள்வி கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

ஈழத்தமிழர்களாகிய எமக்கோ இந்தக் கேள்வி மிகவும் பரிட்சையமானது. இன்றுவரை ‘இதுகள் எங்க கிடந்து வந்ததுகள்’ என்கிற ஆராய்ச்சி நடந்துகொண்டுதான் இருக்கிறது.

உலகம் முழுவதும் சிறுபான்மை இன மக்களைப் பார்த்துக் கேட்கப்படும் பொதுக் கேள்வியாகிய ‘ஏன் இஞ்ச வந்தனி’ ஐ, தனது குறும்படத்தின் தலைப்பாக்கிய ஜனாவுக்கு முதலில் வாழ்த்துக்கள்.

வெளியில் இருப்பவர்கள் மாத்திரமல்ல…. எமக்கு உள்ளேயும் இந்தக் கேள்வியை ‘கொடூரமான’ முறையில் அவ்வப்போது கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். அதையும் ஜனா, காட்சியாக்கியிருக்கிறார்.

ஜனா போன்ற வெகு சில இயக்குனர்களின் படங்களில் வரும் காட்சியமைப்பு, பின்னணி இசை, மொழிவழக்கு, படத்தொகுப்பு பற்றியெல்லாம் நாம் கவலைப்படவே தேவையில்லை. காரணம் இவர்கள் படத்தை ‘எடுப்பதில்லை’ மாறாக ‘செதுக்குகிறார்கள்’ – அதனால் அவ்வளவு இயல்பாக வந்துவிடுகின்றன இவர்களின் படைப்புக்கள்.

எஃப் எம் அலைவரிசை வராத காலத்தில், வானொலியில் ‘கரகர’ ஒலியோடுதான் பாடல்கள் ஒலிக்கும். அதைக் கூட நன்கு கவனித்து, காட்சியாக்கியிருக்கும் ஜனாவுக்கு இன்னொருமுறை பாராட்டுக்கள். – அந்த ‘நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்’ பாடலும் அதனை ஒட்டிய காட்சியும் – இயக்குனரின் சாமர்த்தியம்..!

குறும்படத்தின் கடைசி நிமிடங்கள்….. என்னத்தைச் சொல்ல..? அதை அனுபவித்தவர்கள் நாம்..! காட்சியாக காணும்போது மீண்டும் அதே வலி…!

எல்லோரும் தவறாது படத்தைப் பாருங்கள். கலைஞர்களை வாழ்த்துக்கள்.

‘ஏன் இஞ்ச வந்தனி’ – எமக்கானது மட்டுமல்ல..! எம்மைப் போன்ற எல்லோருக்குமானது…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg