இந்திய கிரிக்கெட் அணிகளின் தேர்வாளர்களுக்கு வெகுமதி
In விளையாட்டு
Updated: 07:02 GMT, Aug 11, 2017 | Published: 07:01 GMT, Aug 11, 2017 |
0 Comments
1179
This post was written by : Risha

இந்திய தேசிய கிரிக்கெட் அணிகளின் சிறப்பான செயற்பாட்டை தொடர்ந்து, தேசிய அணியின் தேர்வாளர்களை பாராட்டும் வகையில் அவர்களுக்கான பண வெகுமதிகளையும், விருதுகளையும் வழங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி தேர்வாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 இலட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியினர் ஐ.சி.சி. சம்பியன் கிண்ண இறுதி போட்டிவரை முன்னேறி இரசிகர்களின் பெரும் நன்மதிப்பை பெற்றனர்.
இந்நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தெரிவுசெய்த தேர்வுக்குழு பாராட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.