Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதா இருந்திருந்தால் இது நடந்திருக்காது: ஆதங்கத்தில் வைகோ

In இந்தியா
Published: 09:06 GMT, Aug 11, 2017 |
0 Comments
1196
This post was written by : Puvanes
vaiko_jaya001

நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சமூக நீதி சாகடிக்கப்பட்டு விட்டதாக ம.தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், நீட் பரீட்சை விவகாரத்தில் காணப்படும் உண்மை நிலை குறித்து மாணவர்கள் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை எனக் கூறிய அவர், நீட் தேர்வில் தமிழகத்திற்கு மத்திய அரசு விலக்கு அளிக்கும் என்ற நம்பிக்கையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் தமிழக அரசினை மத்திய அரசே இயக்கி வருகின்றது எனவும் குறிப்பிட்ட வைகோ கடந்த காலத்தில் மத்திய அரசின் திட்டங்களில் உடன்பாடு இல்லாத போது அவற்றினை ஜெயலலிதா எதிர்த்து வந்தார் எனவும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து, முல்லைபெரியாறு, காவிரி போன்ற பிரச்சினைகளின் போது மத்திய அரசினை ஜெயலலிதா எதிர்த்து வென்றார் எனவும் கூறிய அவர், இப்போது ஜெயலலிதா இருந்திருப்பார் என்றால் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களில் பாரதிய ஜனதாவிற்கு ஆதரவு தெரிவித்திருக்க மாட்டார் எனவும் வைகோ மேலும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg