Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிர்க்க தயாராக இருக்கின்றோம்: பழனிசாமி அணி ஆவேசம்

In இந்தியா
Updated: 10:37 GMT, Aug 11, 2017 | Published: 10:37 GMT, Aug 11, 2017 |
0 Comments
1248
This post was written by : Puvanes

தற்போதைய தமிழக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், ஸ்டாலின் எட்டாக் கனிக்கு கொட்டாவி விட்டுக் கொண்டு வரும் ஒருவர் அவருடைய கனவு எப்போதும் பலிக்காது எனவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இது தொடர்பில் தமிழக முதல்வர் பழனிசாமி கூறுகையில், ஸ்டாலின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெறுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஸ்டாலின் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்றோம் அதேபோல மீண்டும் வெற்றி பெறுவோம் எனவும் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg