Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

நெல்லிகாய் உண்பதால் இத்தனை பயன்கள் கிடைக்குமா?

In
Published: 10:42 GMT, Aug 11, 2017 |
0 Comments
1096
This post was written by : Kemasiya
7MOcyDS

நெல்லிக்கனி சளி புற்றுநோய் மற்றும் இதய நோய்களை கட்டுப்படுத்தும் அசாத்திய தன்மை கொண்டது.

ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் நெல்லிக்கனிக்கு முக்கிய பங்கு உண்டு. இது இதயத்திற்கும் நலம் சேர்க்கும்.

இதிலிருக்கும் கசப்பான மற்றும் புளிப்பான சுவை செரிமான நொதிகள் சீராக செயல்பட தூண்டுகிறது. செரிமான கோளாறு பிரச்சினைகளுக்கும் விரைவான தீர்வை கொடுக்கிறது. குடல் இயக்கம் சீராக நடைபெறவும் இரைப்பை குடல் திசுக்களை சுத்தப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆரோக்கியமான நீண்ட பளபளப்பான கூந்தலுக்கு நெல்லிக்காயின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கிறது. அதனால்தான் கூந்தல் பராமரிப்பு பொருட்கள் அனைத்திலும் நெல்லிக்கனி இடம்பிடித்திருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஆற்றலும் கொண்டது. குளிர்காலங்களில் சளி இருமல் பிரச்சினையை தவிர்க்க உதவுகிறது. விஷத்தன்மை பாதிப்புகளில் இருந்து உடல் செல்களை பாதுகாக்கும் காரணியாகவும் செயல்படுகிறது.

தோல் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு கல்லீரல் பாதிப்பே முக்கிய காரணமாக இருக்கிறது. நெல்லிக்கனியை தொடர்ந்து சாப்பிட்டு வருவது கல்லீரலுக்கு நலம் சேர்க்கும். தோல் பிரச்சினைகளும் கட்டுப்படும். நெல்லிக்கனியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பளபளப்பான சருமத்தையும் பெறலாம்.
நெல்லிக்கனியில் கொழுப்பு குறைவாக இருக்கிறது. உடலில் உள்ள கொழுப்பை குறைக்கவும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் துணைபுரியும். அதிலும் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு நல்ல பலன் கொடுக்கும்.

100 கிராம் நெல்லிக்கனியில் 60 கலோரிகளே இருக்கிறது. அதேவேளையில் வைட்டமின்கள் தாதுக்கள் ஹார்போஹைட்ரேட்டுகள் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் இருக்கிறது. நெல்லிக்கனியை தினமும் ருசிப்பது உடல் நலத்திற்கு நலம் சேர்க்கும்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)