Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மோடி விடுத்துள்ள புதிய அறிவிப்பு

In இந்தியா
Published: 11:05 GMT, Aug 11, 2017 |
0 Comments
1403
icon_com
This post was written by : Puvanes
modi001

எதிர்வரும் 2022 இல் இந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பாரதப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியினரின் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், நாடாளுமன்ற கூட்டத் தொடர் என்பது மிக முக்கியமானதாகும் எனக் குறிப்பிட்ட மோடி நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களை 2019ஆம் ஆண்டு கவனித்துக் கொள்கின்றேன் எனவும் அறிவித்துள்ளார்.

கட்சியை விட தனி நபர் எவரும் உயர்ந்தவர்கள் அல்ல. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ள தனி உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது எனவும் கூறிய அவர் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg