Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வாழை இலை மீன் மசாலா

In
Updated: 11:08 GMT, Aug 11, 2017 | Published: 11:08 GMT, Aug 11, 2017 |
0 Comments
1284
icon_com
This post was written by : Kemasiya
1DDFF3E4-0A1A-4290-9D29-08B4D6EE2FFD_L_styvpf

இது வாழை இலை பொதியல் மீன் மசாலா செய்முறை பற்றிய வீடியோ காட்சி.

ஒரு கிலோ சீர், பீர்ல் ஸ்பாட் அல்லது பாம்பெர்ட் மீன் எடுத்து சுத்தம் செய்து தயாராக வைக்கவும்.

மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுத்து கீழ்க்கொடுக்கப்பட்டுள்ளவற்றை வதக்கவும்.

மெல்லிதாக வெட்டப்பட்ட வெங்காயம் 4-5
நறுக்கிய இஞ்சி 2-3
நறுக்கிய பூண்டு 10-12 பல்

வதக்கிய கலவை பொன்னிறமாகியதும் அடுப்பிலிருந்து இறக்கி இந்தக் கலவையைத் தனிப் பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.

இப்போது அதே பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கீழ்கொடுக்கப்பட்டுள்ள மசாலா விழுதினை வதக்கவும்.
மிளகாய் வற்றல் தூள் – 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
வெந்தயப் பொடி – ½ தேக்கரண்டி

இந்த மூன்று பொடிகளையும் சேர்த்து அரைத்தோ சிறிது நீரில் கரைத்தோ இந்த மசாலா விழுதைத் தயாரிக்கலாம்.

வறுத்த மணம் வரும் வரை வதக்க வேண்டும். பின்னர் ¼ கிலோ நறுக்கிய தக்காளியைப் போட வேண்டும். தக்காளி நன்கு வேகும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கி வைத்த வெங்காயம், இஞ்சி, பூண்டு கலவையைச் சேர்க்கவும். ஒரு தேக்கரண்டி வினிகர் மற்றும் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்றாக வதங்கும் வரை கிளறவும்.

எல்லா பொருட்களும் நன்கு சேர்ந்ததும் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்

ஒரு வாழை இலை எடுத்து அதைத் தீயில் வாட்டி அதனை மிருதுவாக்கவும். அதன் மேல் சிறிது எண்ணெய் தடவி மசாலா வைத்து அதன் மேல் ஒரு துண்டு மீனை வைக்கவும். பின்னர் மேற்பகுதியிலும் மசாலாவை வைத்து மீனை வாழை இலையில் பொதிந்து இறுக்கமாக கட்டவும்.

அடி தடிமனான ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிது எண்ணெய் ஊற்றி மீன் பொட்டலங்களை வைத்து வேக வைக்கவும். குறைந்த அளவு தீயில் கொஞ்சம் கொஞ்சமாக வைத்து பாத்திரத்தை மூடி சமைத்து எடுக்கவும்.

வாழை இலை பொன்னிறமாகியதும் மீன் தயாராகி விட்டது. வாழை இலை மணத்துடன் மீன் சாப்பிட சுவையாக இருக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg