Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குழந்தைத் திருமணம்: தடுத்து நிறுத்த ராமதாஸ் கோரிக்கை

In இந்தியா
Updated: 05:12 GMT, Aug 12, 2017 | Published: 03:56 GMT, Aug 12, 2017 |
0 Comments
1245
This post was written by : Surenth

கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வருவதாகவும் இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியின் பரிதாபமான நிலை குறித்து ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி வேதனையளிப்பதாக அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் வாழும் பழங்குடியின மக்களும், பிற சமுதாய மக்களும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த மாவட்டங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் வேலை தேடி வெளியூர் செல்வதே இவ்வாறான பிரச்சினைகளுக்கு காரணம் என்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மட்டுமின்றி இவ்வழக்கம் உள்ள அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg