Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகம் மற்றும் கேரளாவில் முக்கிய புள்ளிகள் மீது ஐ.எஸ். இலக்கு

In இந்தியா
Updated: 05:54 GMT, Aug 12, 2017 | Published: 05:54 GMT, Aug 12, 2017 |
0 Comments
1283
This post was written by : Surenth

தமிழகம் மற்றும் கேரளாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிரமுகர்களை கொலை செய்ய திட்டமிட்டதுடன், கொடைக்கானலில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மொய்னுதீன் பாரா கடவத்திடம் மேற்கொண்ட விசாரணையின் போதே இந்த விடயம் வெளிவந்துள்ளதாக புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த குற்றப்பத்திரிகையை நேற்று (வெள்ளிக்கிழமை) எர்ணாகுளம் நீதிமன்றில் சமர்ப்பித்து கருத்து தெரிவித்த போதே இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவரிடம் இருந்த கையடக்கத் தொலைபேசி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றில் ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த தகவல் கிடைத்துள்ளது என்றும் புலனாய்வு முகமை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, வழக்கில் மற்றொரு குற்றவாளியான சாஜீர், அமீரகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு தப்பி சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்ய அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg