Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீரில் தாக்குதல்: பெண் ஒருவர் பலி

In இந்தியா
Published: 06:57 GMT, Aug 12, 2017 |
0 Comments
1163
icon_com
This post was written by : Surenth
Kashmeer

காஷ்மீரின் மெந்தார் பகுதியில் அத்துமீறி நுழைந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் இன்று (சனிக்கிழமை) அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் அதற்கு இந்திய பாதுகாப்பு படையினரால் பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்புத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கிச்சூட்டில், உயிரிழந்த பெண் மெந்தார் மேல் கோலாட் பகுதியை சேர்ந்த 45 வயதான ரகியா பேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றிரவு வடக்கு காஷ்மீரின் கலரோஸ் குப்வாரா மாவட்டத்தின் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள 42 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் தலைமையகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இராணுவவீரர் ஒருவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg