Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரதமருடனான சந்திப்பிற்கு ஏற்பாடு: விவசாயிகளிடம் தமிழக முதல்வர் உறுதி

In இந்தியா
Updated: 17:27 GMT, Aug 12, 2017 | Published: 09:50 GMT, Aug 12, 2017 |
0 Comments
1140
icon_com
This post was written by : Risha
pala

பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது தொடர்பான விவசாயிகளின் கோரிக்கையை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார்.

துணை ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்வதற்காக டெல்லி சென்ற முதல்வரை, டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் சந்தித்து பேசினர். அதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) முதல்வரை சந்தித்த விவசாயிகள், பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறும், விவசாய கடனை தள்ளுபடி செய்யுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

அதன்போது, குறித்த கோரிக்கைகளை கடிதமாக எழுதி தருமாறும், அதனை பிரதமரிடம் கையளித்து அவரை சந்திக்க அனுமதி பெற்றுத்தருமாறும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

ஆரம்பத்தில், முதல்வரை சந்திக்க தமிழக விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விவசாயிகள் டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, முதல்வரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg