Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தி.மு.க.வினர் தூர்வாரிய ஏரிகளை ஸ்டாலின் பார்வையிடலாம்: நீதிமன்றம்

In இந்தியா
Updated: 10:25 GMT, Aug 12, 2017 | Published: 10:07 GMT, Aug 12, 2017 |
0 Comments
1153
icon_com
This post was written by : Risha
chennai

தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் தூர்வாரிய ஏரிகளை பார்வையிடுவதற்கு, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் கச்சராயன் ஏரியை பார்வையிட சென்ற மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பின்படி, சேலம் கச்சராயன் ஏரியை மு.க.ஸ்டாலின் பார்வையிட தடை போடக் கூடாது என்றும் தமிழகம் முழுவதும் தி.மு.க. தூர்வாரிய ஏரிகளை பார்வையிட அவருக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏரியை பார்வையிடுவதற்கு ஸ்டாலின் தரப்பில் 25 நபர்கள் உடன் செல்லலாம் என்றும், பார்வையிடுவதற்கு முன்பு அது குறித்த தகவலை பொலிஸாருக்கு ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg