Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பூநகரியில் நிலமெஹர ஜனாதிபதி மக்கள் சேவை!

In இலங்கை
Published: 11:54 GMT, Aug 12, 2017 |
0 Comments
1113
icon_com
This post was written by : Ravivarman
20170812_100437

பூநகரி பிரதேச செயலக பிரிவில் நிலமெஹர ஜனாதிபதி மக்கள் சேவை மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஒழுங்குபடுத்தலில் குறித்த சேவை நடைபெற்றது.

இந் நடமாடும் சேவையில் பிறப்பு இறப்பு பதிவுகள், விவாக பதிவுகள், தேசிய அடையாள அட்டைப் பதிவுகள், சாரதி அனுமதி பத்திரம், முதியோர் அட்டை, காணி, சிறுதொழில் முயற்சி தொடர்பான அறிவுறுத்தல்கள், கடவுச்சீட்டு, வங்கிச்சேவைகள், என பல சேவைகள் இடம்பெற்றுள்ளன.

மேற்படி நடமாடும் சேவையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் மாவட்ட அரசஅதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரசஅதிபர் சத்தியசீலன், பூநகரி பிரதேச செயலர் கிருஸ்ணேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

20170812_100727 20170812_100512 20170812_100448 20170812_100429

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg