Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சமாதானத்தினைக் குழப்ப சிலர் பொய்ப் பிரசாரங்கள்: சஜித் பிரேமதாச

In இலங்கை
Published: 12:37 GMT, Aug 12, 2017 |
0 Comments
1153
icon_com
This post was written by : Ravivarman
sajith-626x3801

நாட்டில் நிலவும் சமாதானத்தினைக் குழப்புவதற்கு சிலர் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன் சீடா மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபையும் இணைந்து மேசன் தொழில் பயிற்சியை நிறைவுசெய்த பயிற்சியாளர்களுக்கு தொழில் உபகரணம் வழங்கும் நிகழ்வு யாழ்.திருமறைக்கலாமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கில் பாதுகாப்பில்லை, குழப்பநிலைகள் காணப்படுவதாக கூறி மக்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றார்கள்.  அவ்வாறான நிலமை இல்லை என்பதனை உறுதிப்படுத்த விசேட பாதுகாப்பின்றி சாதாரண மனிதனாக பயணத்தினை மேற்கொண்டு யாழிற்கு வருகை தந்துள்ளேன்.

எமது நாட்டினைக் கட்டி எழுப்ப வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. எனவே, பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பவர்களை எதிர்த்து நாம் அனைவரும் நல்லிணக்கத்துடனும், சமாதானத்துடனும் வாழ்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg