Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீர்கொழும்பு துப்பாக்கி பிரயோக சம்பவம்: நால்வர் கைது! (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 15:30 GMT, Aug 12, 2017 | Published: 13:09 GMT, Aug 12, 2017 |
0 Comments
1326
This post was written by : Ravivarman
1450857999-2884

நீர்கொழும்பு குறன பகுதியில் விஷேட அதிரடிப்படையினர் மீது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு குறன பகுதியில் இன்று (சனிக்கிழமை) மாலை அதிரடிப்படையினர் மீது இனந்தெரியாத ஆயுதக் குழுவினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பில் அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிச் சூடு!

நீர்கொழும்பில் இன்று (சனிக்கிழமை) மாலை விஷேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நீர்கொழும்பு குறண எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானில் வந்த இனந்தெரியாத குழுவினர் விஷேட அதிரடிப்படையினரின் வாகனத்தின் மீது துப்பாக்கி சூட்டு பிரயோகத்தினை மேற்கொண்டதாக நீர்கொழும்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் குறித்த பிரதேசத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மேலதிக பொலிஸார் அப்பகுதிகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg