Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜயதாசவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் 17 பேர் கைச்சாத்து!

In இலங்கை
Published: 13:39 GMT, Aug 12, 2017 |
0 Comments
1244
This post was written by : Ravivarman
Mujibur-Rahman

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிராக கொண்டு வருவதற்கு உத்தேசித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியடைந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றினைக் கொண்டுவர உள்ளனர்.

இந்நிலையிலேயே குறித்த பிரேரணையில் 17 உறுப்பினர்கள் இதுவரை கைச்சாத்திட்டுள்ளனர். மத்திய வங்கியின் பிணைமுறி பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணைகளில் ஏற்பட்டுள்ள தாமத நிலைக்கெதிராகவே நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மீது மேற்படி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுகின்றது” என முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg