Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொழிற்பயிற்சி பெற்றவர்களுக்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு!

In இலங்கை
Updated: 15:56 GMT, Aug 12, 2017 | Published: 15:56 GMT, Aug 12, 2017 |
0 Comments
1271
This post was written by : Ravivarman

மேசன் தொழிலுக்குப் பயிற்சி பெற்ற 400 பயிற்சியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் இன்று (சனிக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ். திருமறைக் கலாமன்றத்தில் மேற்படி நிகழ்வு நடைபெற்றது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாச, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் இணைந்து தொழில் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் உட்பட வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்ட முகாமையாளர்கள், எனப் பலர் கலந்துகொண்டனர்.

கடந்த மூன்று மாதங்களாக தேசிய வீடமைப்பு அதிகார சபையுடன் சீடா மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபை இணைந்து யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மேசன் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மூன்று மாத பயிற்சியினை நிறைவு செய்த 400 பேருக்கே மேசன் தொழில் மேற்கொள்வதற்கான மேற்படி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

3 மாத பயிற்சியின் போது பயிற்சி பெற்றவர்களுக்கு சீருடைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் மாதாந்த கொடுப்பனவுகளுடன் மேசன் தொழில் மேற்கொள்வதற்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

IMG20170812130735 IMG20170812130631 IMG20170812130538

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg