Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

தூய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி உறுதி

In இலங்கை
Updated: 03:14 GMT, Aug 13, 2017 | Published: 03:13 GMT, Aug 13, 2017 |
0 Comments
1113
This post was written by : Elakkiya
1_President_MS

நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் தூய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உறுதியளித்துள்ளார்.

தலவை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, எத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அதனை எதிர்கொண்டு வெற்றிபெற்று மக்கள் விரும்பும் தூய அரசியல் கலாசாரத்தை நாட்டில் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாக  உறுதியளித்துள்ளார்.

மேலும், குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்களை தாண்டி எந்தவொரு அரசாங்கமும் நிறைவேற்றாத பணிகளை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விவசாய சமூகத்தின் பொருளாதாத்தை கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, முந்தைய அரசாங்கங்களிடமிருந்த கிடைக்காத குப்பை பிரச்சினைக்கான தீர்வு அடுத்த வருடத்திற்குள் நிலையான தீர்வாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)