Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சரத் யாதவ் பதவி நீக்கம் : நிதிஷ் குமார் அதிரடி

In இந்தியா
Updated: 03:35 GMT, Aug 13, 2017 | Published: 03:34 GMT, Aug 13, 2017 |
0 Comments
1122
icon_com
This post was written by : Elakkiya
sharad-yadav

மாநிலங்களவை ஐக்கிய ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவர் பதவியிலிருந்து சரத் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் நேற்று (சனிக்கிழமை) இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

சரத் யாதவின் அண்மைக்கால செயற்பாடுகளை கருத்தில்கொண்டு இந்த நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பீகாரில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்ததை சரத் யாதவ் எதிர்த்ததால் நிதிஷ் குமார் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

பீகாரில் முன்னதாக ராஜ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைந்து நிதிஷ் குமார் ஆட்சியமைத்திருந்த நிலையில், கட்சிக்குள் ஏற்பட்ட விரிசல் காரணமாக முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி பா.ஜ.க.வுடன் இணைந்து மீண்டும் ஆட்சியமைத்தார்.

இதற்கு ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர்களும் கட்சியின் மாநிலங்களவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவர் சரத் யாதவும் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg