Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜோர்ஜியாவில் நிறைவுக்கு வருகிறது கூட்டு இராணுவப் பயிற்சிகள்

In ஐரோப்பா
Published: 04:44 GMT, Aug 13, 2017 |
0 Comments
1186
icon_com
This post was written by : Elakkiya

ஜோர்ஜியாவில் நேட்டோ தலைமையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகள் முடிவினை நெருங்கியுள்ளது.

மேற்படி பயிற்சிகளில், ஜோர்ஜியா மற்றும் அமெரிக்க துருப்புக்களிலிருந்து 2800 சேவை ஊழியர்களும் ஆர்மேனியா, ஜேர்மனி, ஸ்லோவேனியா, துருக்கி, உக்ரைன் மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த படையினரும் பங்கேற்றிருந்தனர்.

ஜோர்ஜியாவின் தலைநகரான திபிலீசியிலிருந்து சுமார் 30 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள வசியானி இராணுவத் தளத்தில் இந்த பயிற்சிகள் யாவும் இடம்பெற்றிருந்தன.

இதன்போது கருத்து தெரிவித்த அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர், ‘ இந்த பயிற்சி நடவடிக்கைகள் ஜோர்ஜியர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பாகும். சிக்கலான பயிற்சிகளை செய்வதில் அவர்கள் திறமையானவர்கள். இது மிகவும் அற்புதமான நிகழ்வாகும். இதில் பங்கேற்பதற்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் பாராட்டுகின்றோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த பெரிய அளவிலான அமைப்பு மற்றும் ஒத்திசைவு பயிற்சிகளில் பங்கேற்ற அனைத்து நாட்டு பிரதிநதிகளுக்கும் ஜோர்ஜியா ஜனாதிபதி ஜோர்ஜ் மார்க்வெலாஷ்விலி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg