Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

60 குழந்தைகளின் மரணத்தை மறைத்த மருத்துவமனை!: விசாரணைகளுக்கு உத்தரவு

In இந்தியா
Published: 04:26 GMT, Aug 13, 2017 |
0 Comments
1203
icon_com
This post was written by : Puvanes

உத்திர பிரதேசம் – கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் எனப்படும் அரச மருத்துவமனையில் 60 குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைகளை நடத்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மருத்துவமனையில் கடந்த 3 தினங்களில் மட்டும் 35 குழந்தைகள் மரணமடைந்துள்ளதோடு கடந்த 7ஆம் திகதியில் இருந்து மொத்தமாக 60 குழந்தைகள் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் மூளை அழற்சி நோய் காரணமாக 7 குழந்தைகள் மட்டுமே உயிரிழந்நதாக குறிப்பிட்டு சம்பவத்தை மறைத்த மருத்துமனை அதிகாரிகள் பின்னர் குழந்தைகள் மரணமடைந்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.

மருத்துவமனையில் ஏற்பட்ட ஒக்சிஜன் பற்றாக்குறையினாலேயே இவ்வாறான மரணங்கள் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்படுகின்றது. எனினும் உயிரிழந்த குழந்தைகள் அனைத்தும் பல்வேறு நோய்களின் காரணமாகவே மரணமடைந்துள்ளதாக மருத்துவமனையும், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங்கும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஆராய நேற்றைய தினம் மருத்துவமைனைக்கு சென்ற சுகாதாரத்துறை அமைச்சர்களான சித்தார்த்நாத் சிங் மற்றும் அசுத்தோஷ் தாண்டன் ஆகியோர் குழந்தைகள் நலப்பிரிவு பகுதிகளை ஆய்வு செய்து விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள காரணத்தால் இந்த சம்பத்திற்கு பொறுப்பேற்று மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

மேலும், அரசு மருத்துவமனையில் ‘ஒக்சிஜன் பற்றாக்குறையினால் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்திருப்பது என்பது வெறும் விபத்து அல்ல, இது ஒரு படுகொலை’ என நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg