Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேர்லினுடனான உறவுகள் தேர்தலின் பின்னர் சீராகும்: துருக்கி நம்பிக்கை

In ஐரோப்பா
Published: 05:14 GMT, Aug 13, 2017 |
0 Comments
1228
icon_com
This post was written by : Elakkiya

ஐரோப்பிய உள்நாட்டு அரசியல் மற்றும் பேர்லினுடனான உறவுகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் ஜேர்மனிய நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் சீராகும் என துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

துருக்கியின் மேற்கு நகரான இஸ்பாடாவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘துருக்கிக்கு எதிரான ஐரோப்பிய நாடுகளின் பெரும்பாலான விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் உள்நாட்டு அரசியலாலே ஏற்படுகின்றது என்பதை நாம் அறிவோம். நெதர்லாந்தும் தேர்தல் காரணமாக தேவையற்ற வகையில் எமது உறவுகளை சிரமமாக்கியுள்ளது என்பதை நாம் காண்கின்றோம். கடந்த காலங்களில் பிரான்ஸ், ஒஸ்ரியா, போன்ற நாடுகள் இதுபோன்ற உத்திகளை கையாண்டன. ஜேர்மனியும் அதேபோன்ற உத்திகளை கையாள்வதாக தென்படுகின்றது. எனவே தேர்தலின் பின்னர் அவர்கள் வழமையான நிலைக்கு திரும்புவார்கள் என்று நான் நம்புகின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி ஜேர்மனிய நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கல் நான்காவது முறையாக போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg