Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரெக்சிற்றுக்கு பின்னர் கால அவகாசம் தேவை: பிரித்தானிய அமைச்சர்கள்

In
Updated: 05:49 GMT, Aug 13, 2017 | Published: 05:43 GMT, Aug 13, 2017 |
0 Comments
1096
This post was written by : Elakkiya
_97312551_54301344-a7e1-4959-a974-1f1b1f2f1326

பிரெக்சிற்றுக்கு பின்னர் வர்த்தகத்தை சீர் செய்வதற்கு பிரித்தானியாவுக்கு குறிப்பிட்டளவு காலம் தேவைப்படுவதாக சர்வதேச வர்த்தக இராஜாங்க செயலாளர் லியாம் ஃபொக்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்தவொரு பிரெக்சிற் ஒப்பந்தமும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்கியிருக்கும் வகையிலோ அல்லது காலவரையற்றதாகவோ இருக்காது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேபோன்றதொரு கருத்தினை பிலிப் ஹமொண்டும் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இவர்களுடைய கருத்துக்கள் தெரேசா மேயின் அமைச்சரவையில் பிரெக்சிற் தொடர்பான குறிக்கோள்களுக்கு மத்தியில் போட்டியிடும் இருதரப்பினருக்கு இடையிலும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான முயற்சியாக அமைந்துள்ளது.

மேலும், எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும்போது, சுங்க தொழிற்சங்கம் மற்றும் ஒற்றைச் சந்தை ஆகிய இரண்டையும் கைவிடும் என்று அவர்கள் தெரிவித்துள்ளதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)