Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கென்யாவில் அமைதியான தேர்தல் -மக்களுக்கு வாழ்த்து

In உலகம்
Published: 06:05 GMT, Aug 13, 2017 |
0 Comments
1074
icon_com
This post was written by : Suganthini

கென்யாவில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக மக்களுக்கு, ஆபிரிக்க ஒன்றிய ஆணையகம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

கென்யாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான உஹுரு கென்யாட்டா அதிகளவான வாக்குகளைப் பெற்று மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், இவர் வெற்றி பெற்றுள்ளதைத் தேர்தல்கள் ஆணையகம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை அடுத்து, நேற்று (சனிக்கிழமை) ஆபிரிக்க ஒன்றிய ஆணையகம் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்ட 40 ஆயிரம் வாக்களிப்பு நிலையங்களில், 20 மில்லியன் மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg