Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

மசூதிகளுக்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்குரிய பொதிகள்: விசாரணைகள் ஆரம்பம்

In
Updated: 07:01 GMT, Aug 13, 2017 | Published: 07:01 GMT, Aug 13, 2017 |
0 Comments
1115
This post was written by : Elakkiya
5692c2f4-fb4e-4b29-929c-0a333e5a48f3

பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் அமைந்துள்ள மசூதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படும் சந்தேகத்திற்குரிய பொதிகள் தொடர்பில் பிரித்தானிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஷெபீல்ட் பகுதியிலிருந்து லண்டன், சௌத் யோர்க்ஷையர் மற்றும் அமெரிக்க மசூதிகளுக்கு மேற்படி சந்தேகத்திற்குரிய பொதிகள் அனுப்பிவைக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகம் ஒன்று நேற்று (சனிக்கிழமை) செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இத்தகைய மத அச்சுறுத்தல் எந்த சூழ்நிலையிலும் தவறானது என்றும் அனுப்பியவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சந்தேகத்திற்குரிய பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள், குறித்த பொதிகள் நச்சு அல்லது தீங்கு விளைவிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் கடந்த சில நாட்களாக தீங்கிழைக்கும் தகவல் தொடர்புகள் மற்றும் பொதிகள் குறித்த பல முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)