Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கதிராமங்கலத்தில் ஹைட்ரோ காபன் திட்டத்தை தொடருவது உறுதி – ஓ.என்.ஜி.சி

In இந்தியா
Published: 06:51 GMT, Aug 13, 2017 |
0 Comments
1166
icon_com
This post was written by : Puvanes
neduvasal001

கதிராமங்கலத்தில் ஹைட்ரோ காபன் திட்டமானது தொடர்ந்தும் செயல்படுத்தப்படும் என ஓ.என்.ஜி.சியின் மேலாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ காபன், மீத்தேன் திட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கதிராமங்கலம், நெடுவாசல் கிராம மக்கள் தொடந்ததும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காவிரிப் படுகையில் 110 எண்ணெய்க் கிணறுகளை அமைக்கும் திட்டமானது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் நெடுவாசல் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் மக்களுக்கு இந்தத் திட்டம் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் திட்டமானது அறிவியல் ரீதியில் சரியானது என மக்களுக்கு புரியவைத்துள்ளளோம். எனினும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் கதிராமங்கல பகுதியில் அவ்வாறு செய்ய முடியவில்லை எனவும் ராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் அச்சத்தை போக்கி தகுந்த விளக்கத்தினை அவர்களுக்கு நிச்சயமாக அளிப்போம் எனக் கூறிய அவர், திட்டமிட்ட வகையில் எல்லா இடங்களிலும் ஹைட்ரோ காபன் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg