Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

ட்ரம்புக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

In
Updated: 07:38 GMT, Aug 13, 2017 | Published: 07:37 GMT, Aug 13, 2017 |
0 Comments
1090
This post was written by : Elakkiya
cd47f714-dff2-439f-8e38-277eedff90bd

இராணுவ நடவடிக்கைகள் மூலம் வடகொரியாவுடன் பதற்றங்களை அதிகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறொஸ்வனர் சதுக்கத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, வடகொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கு ட்ரம்ப் இராஜதந்திர தீர்வுகளையே தொடர வேண்டும் என்று ஆர்ப்பாட்டகாரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வடகொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை சோதனைகள் அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு இடையில் பதற்றமான சூழ்நிலைகளை தோற்றுவித்துள்ளது. உலகின் கோபத்தையும் போரையும் வடகொரியா காணவில்லை என்று அண்மையில் ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.

இந்த அச்சுறுத்தலுக்கு பதிலளித்த வடகொரிய அமெரிக்காவின் பசுபிக் பிராந்தியமான குவாம் அருகில் நான்கு ஏவுகணைகளை பரிசோதிக்கும் திட்டத்தை அறிவித்தது.

இந்நிலையில் வடகொரியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை ட்ரம்ப் தவிர்க்க வேண்டும் என போருக்கு எதிரானவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)